ஆயிரம் கோடி செல்வம் இருந்தாளும் சொந்த பந்தமும் , நல்ல நட்புமுமே கடைசி வரையில் நம்முடன் இருக்கும்

ஆயிரம் கோடி செல்வம் இருந்தாளும் சொந்த பந்தமும் , நல்ல நட்புமுமே கடைசி வரையில் நம்முடன் இருக்கும் எலி ஒன்று வைர வியாபாரி வீட்டிலிருந்து ஒரு வைரத்தை விழுங்கிவிட்டது.. மிகவும் விலை உயர்ந்த வைரம் அது. வியாபாரி எலி பிடிப்பவனை பார்த்து எப்படியாவது அந்த எலியை “ஷூட்”செய்து வயிற்றில் இருக்கும் வைரத்தை எடுக்க உதவ வேண்டும் என கேட்டுக் கொண்டார்.. எலி பிடிப்பவனும் தன் துப்பாக்கி’யுடன் வந்துவிட்டான்.. அதை ஷூட் செய்ய.. எலி அங்கே இங்கே என்று  போக்கு காட்டி ஓடியதில் திடீரென்று ஆயிரக்கணக்கான சக எலிகள் ஒன்று கூடிவிட்டன.. ஆயிரக்கணக்கானஎலிகளுக்கிடையேயும் அந்த வைரம் முழுங்கிய எலி மட்டும் அந்த எலிக்கூட்டத்தோடு சேராமல் ஒதுங்கி தனித்தே நின்றிருந்தது…

"ஆயிரம் கோடி செல்வம் இருந்தாளும் சொந்த பந்தமும் , நல்ல நட்புமுமே கடைசி வரையில் நம்முடன் இருக்கும்"

நம்மையே இழந்து விடுகிறோம்

நம்மையே இழந்து விடுகிறோம் ஒரு பாம்பு கார்பென்டரி ரூம்குள்ள தெரியாம வந்திடுச்சு… உள்ளே உள்ள கார்பென்டரி கருவிகள் மேல ஊர்ந்து போகும்போது எதோ ஒரு கூர்மையான பொருளால் அதோட உடலில் சிறு காயம் ஏற்பட்டிடுச்சு… உடனே சட்டுன்னு கோபத்தோட அங்க இருந்த ஒரு கூரான ரம்பத்தை போய் கடிக்க ட்ரை பண்ணிச்சு… இப்போ ரம்பத்தின் பற்கள் அறுத்தால் அதன் வாய் பகுதியில் கிழிச்சு ரத்தம் வர ஆரம்பிச்சது. பாம்புக்கு கோபம் தலைக்கேறி…. அந்த ரம்பத்தை சுற்றி வளைத்து கொல்லும் நோக்கத்தோட சுத்தி இறுக்க ஆரம்பிச்சது… தன் பலம் முழுவதையும் சேர்த்து…..என்ன ஆச்சு… முழு உடலும் ரம்பத்தின் பற்களால் வெட்டப்பட்டு, காயம் ஆகி ரத்தம் கொட்ட ஆரம்பிச்சது……

"நம்மையே இழந்து விடுகிறோம்"

நம்முடைய பாசம், அன்பு, நேரம் தவிர

நம்முடைய பாசம், அன்பு, நேரம் தவிர ஒரு சிறுவன் தினமும் வந்து அந்த மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு ஆடிப்பாடி விளையாடி விட்டு போவான்.அவனை பார்த்தாலே அந்த மரத்துக்கு ஆனந்தம் பொங்கும். திடீரென்று ஒரு நாள் அந்த சிறுவன் வரவில்லை. மரமும் அவனை எதிர்பார்த்து காத்திருந்தது. சில நாள் கழித்து அந்த சிறுவன் வந்தான். அந்த மரம் சந்தோஷத்துடன் அவனை பார்த்து ஏன் இவ்வளவு நாள் வரவில்லை? உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்டது. என் நண்பர்கள் எல்லோரும் அழகழகாய் பொம்மைகள் வைத்திருக்கிறார்கள், ஆனால் என்னிடம் மட்டும் ஒன்றும் இல்லை, என்றான். கவலைப்படாதே இந்த மரத்தில் உள்ள பழங்களை எடுத்துச்சென்று கடையில் விற்று பொம்மை வாங்கிக்கொள்.…

"நம்முடைய பாசம், அன்பு, நேரம் தவிர"

சக்தி வாய்ந்த சாமியார்

சக்தி வாய்ந்த சாமியார் ஒரு கிராமத்தில் உள்ள  மக்கள்  ஒன்று கூடி ஆற்றை கடந்து எங்கேயோ செல்ல குழுக்களாக தயாராகிகொண்டிருந்தனர். அப்பொழுது ஆற்றின் கரையருகில் மரத்தின் கீழ் அமர்திருந்த அவ்வூர் கிராம சாமியார் அக்குழுவிலிருந்து ஒருவரை அழைத்து எல்லோரும் எங்கே செல்கிறீர்கள் என கேட்டார் . அவன் உடனே அவசரவசரமாக  ஆற்றின் நடுவிலுள்ள மணல் மேட்டில் ஒரு சக்தி வாய்ந்த சாமியார் ஒருவர் பிரார்த்தனை செய்துக்கொண்டிருக்கிறார் அவரோடு சேர்ந்து நாங்களும் பிரார்த்தனை செய்ய போகிறோம்  என்று கூறி மிக வேகமாய்  தயாராகி  கொண்டிருந்த  குழுவில் கலந்தான்.   கிராமத்து சாமியாருக்கு தன்னை  விட சக்தி  வாய்ந்தவனா என்று  ஒரு பக்கம் பொறாமையும் மறுப்பக்கம் மணல் மேட்டு சாமியாரை பார்க்க வேண்டுமென்கிற ஆர்வமும் அதிகமானது. சாமியாரும் பரிசலில்  ஆற்றை கடந்து  மணல் மேட்டை வந்தடைந்தார். கிராம…

"சக்தி வாய்ந்த சாமியார்"

பிரார்த்தனை

பிரார்த்தனை ஒரு கடலோர நகரில் ஒரு திறமையான படகோட்டி தினமும் படகில் மக்களை அருகிலுள்ள தீவுக்கு அழைத்துச் சென்று திரும்பி வருவது அவரது தொழிலாகும். ஒரு நாள் சில இளைஞர்கள் அவரது படகில் பயணம் செய்தனர். படகை கிளப்பும் முன் படகோட்டி கடவுளை நோக்கி பிரார்த்தனை செய்தார். கடலும் வானமும் அமைதியாக இருந்த அந்த நேரத்தில் பிரார்த்தனை செய்த அவரை பயணிகள் சிரித்து கிண்டல் செய்தனர். அதை பொருட்படுத்தாமல் படகோட்டி படகை கிளப்பினார். படகு நடு கடலை அடைந்தபோது திடீரென்று புயல் வந்தது. படகு மேலும் கீழும் ஆடி தத்தளித்தது. பயந்து போன பயணிகள் கடவுளை நோக்கி பிரார்த்தனை செய்தனர். படகோட்டியையும் பிரார்த்தனை செய்ய அழைத்தனர்.…

"பிரார்த்தனை"

பக்தி

பக்தி ஒருவன் அதிகாலை எழுந்து காலைக்கடன்களை முடித்து ஆற்றில் குளித்து அருகில் உள்ள கோவிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தான். கோவிலில் இறைவன் முன்பு ஏதாவது கோரிக்கைகள் சொல்லியே வழிபடுவது வழக்கமாக இருந்தான். பலநாட்கள் இதைப்பார்த்த ஒரு பெரியவர் அவனை அழைத்து அவனிடம் ஒரு கதை சொன்னார். ஓர் தத்துவஞானி செருப்புக்கூட அணியாதவர். தினமும் கடைவீதி செல்வார். ஒவ்வொரு கடையிலும் சிறிது நேரம் நின்று பார்த்து விட்டு அடுத்த கடைக்கு செல்வார். எல்லாம் பார்ப்பதுடன் சரி. எதையும் வாங்கியதே இல்லை. எல்லாவற்றையும் பார்த்துவிட்டு வெறுமனே திரும்பி வந்து விடுவார். அவருடைய நண்பர் நீ ஏன் தினமும் கடைவீதி செல்கின்றீர் எனக் ஞானியிடம் கேட்க, அங்கு என்னென்ன பொருள்கள்…

"பக்தி"

Love you all

Love you all வழமையான ஓர் வார இறுதிக்குபின் திங்கட்கிழமை காலை வகுப்பினுள் நுழைகிறார் மிஸஸ் தொம்ஸன். அவருக்கு ஒரு வழக்கம்  இருந்தது.அதுதான்  வகுப்பறைக்குள் நுழைந்ததுமே மாணவர்களைப்பார்த்து ‘Love you all!’ என்று சொல்வது. அவர் பொய் சொல்கிறார் என்று அவருக்கே தெரியும். ஏனெனில் அந்த வகுப்பிலுள்ள ஒரேயொரு மாணவனை மட்டும் அவரால் நேசிக்கமுடியவில்லை. ஒழுங்காய் உடுத்தாத, எதிலுமே ஒழுங்காய் இல்லாமல் சுட்டிக்காட்டுவதற்கு எந்தவொரு பொசிடிவ் அட்டிடியூடும் இல்லாத ‘டெடி’என்கிற தியோடர்! அவனுடன் மட்டும் மிஸஸ் தொம்ஸன் நடந்துகொள்ளும் விதம் வித்தியாசமானது! எந்தவொரு தவறான விடயத்திற்கும் அவனையே உதாரணம் காட்டினார்.எந்த நல்ல விடயத்திற்கும் அவனை நிராகரித்தார். அவ்வாண்டிற்கான காலாண்டு பரீட்சை வந்தது. முன்னேற்ற அறிக்கைகள் வகுப்பாசிரியர்களிடமிருந்து…

"Love you all"

போலியான மலிவான விசயங்கள்

போலியான மலிவான விசயங்கள் ஐந்து வயது சிறுமி அமுதா தன் அம்மாவுடன் சூப்பர் மார்க்கெட் சென்றிருந்தாள். அங்கே ஒரு முத்துமாலையை பார்த்தாள். அது வேண்டுமென அம்மாவிடம் அடம்பிடித்தாள். “அம்மு… இது அழகா இருக்கு, ஆனால் விலை அதிகமா இருக்கே.. தவிர இது தரமில்லாத ப்ளாஸ்டிக் மாலை… நான் உன்னோட பிறந்தநாளைக்கு அப்பாகிட்ட சொல்லி ‘ரியலான ஒரிஜினல் பியர்ள்ஸ்’ மாலை வாங்கி தரசொல்றேன்… இது வேண்டாம்மா” என்றாள் அம்மா. ஆனால் அமுதா, அழுது பிடிவாதம் செய்து அந்த ப்ளாஸ்டிக் முத்துமாலையை வாங்கிக் கொண்டாள்… அமுதாவுக்கு அந்த முத்துமாலை மிகவும் ஃபேவரெட் ஆன பொருளாகிப்போனது. அதை எங்கு சென்றாலும் அணிந்திருந்தாள்/ உடன் வைத்திருந்தாள். பள்ளிக்கு செல்லும்போதும், நண்பர்களுடன் விளையாடும்போதும்,…

"போலியான மலிவான விசயங்கள்"

அளப்பரிய அன்பு

அளப்பரிய அன்பு ஒரு நாள் மாலையில் வாக்கிங் முடித்துக் கொண்டு…,“ஒரு தம்பதியினர் வீட்டுக்கு நடந்து வந்துகொண்டிருந்தனர்”…..!!“வரும் வழியில் ஒரு கயிற்றுப்பாலம் ஒன்று இருந்தது”…..!!சற்று இருட்டியதால்….,” இருவரும் வேகமாக நடக்கத் தொடங்கினர்”…..!!திடீரென,” மழைச் சாரல் வீசியது”…..!!வேகமாக நடந்து கொண்டிருந்தவர்கள் ஓடத் தொடங்கினர்…..!!“கணவர் வேகமாக ஓடினார்”……!!கயிற்றுப் பாலத்தை கணவன் கடந்து முடிக்கும் போது தான்,“மனைவி பாலத்தை வந்தடைந்தார்”…..!!மழைச்சாரலோடு ….,கும்மிருட்டும் சேர்ந்து வந்ததால்…,“மனைவி கயிற்று பாலத்தை கடக்க பயப்பட்டாள்”…..!!அதோடு,மின்னலும் , இடியும், சேர்ந்து கொள்ள……,” பாலத்தின் ஒரு பக்கத்தில் நின்று”….,“கணவனை துணைக்கு அழைத்தாள்”……!!“இருட்டில் எதுவும் தெரியவில்லை”……!!“மின்னல் மின்னிய போது”…..,கணவன்…..,” பாலத்தின் மறுபக்கத்தில் நின்று கொண்டிருப்பது தெரிந்தது”……!!தன்னால் முடிந்த வரை…..,.” சத்தமிட்டு கணவனை அழைத்தாள்”…..!!அவள் கணவனோ…..,” திரும்பியே பார்க்கவில்லை”…..!!“அவளுக்கு அழுகையாய் வந்தது”….!!“இப்படி…

"அளப்பரிய அன்பு"

இரண்டு ஆப்பிள்

இரண்டு ஆப்பிள் ஒரு அழகான சிறுமி தன் கைகளில் இரண்டு ஆப்பிள் வைத்திருந்தாள்.. அங்கு வந்த அவளின் தாய் , நீ இரண்டு ஆப்பிள் வைத்திருக்கே ஒன்று எனக்கு கொடு என்றாள்…. தன் தாயை ஒரு வினாடி பார்த்த அந்த சிறுமி,… பின் உடனே ஒரு ஆப்பிளை கடித்து விட்டாள்.. பின் உடனே இரண்டாவது ஆப்பிளையும் கடித்து விட்டாள்.. தாயின் முகத்தில் இருந்த சிரிப்பு உறைந்து போனது. தன் ஏமாற்றத்தை வெளிப்படுத்த முடியாமல் தவித்தாள்… உடனே அந்த சிறுமி, தாயிடம் சொன்னாள்..அம்மா இந்த ஆப்பிள் தான் இனிப்பாக இருக்கு நீ எடுத்துக்க என்றாள்…. அடுத்தவருக்கு போதுமான அளவு இடைவெளி கொடுத்து அவரை அறியவும். The Rosie…

"இரண்டு ஆப்பிள்"